ஒவ்வொரு மென்பொருளும் ஒவ்வொரு பிரச்சினையை தீர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டு இருக்கும்.உதாரணமாக Photoshop மென்பொருள் புகைப்படங்ளை அழகுபடுத்துவதற்காகவும் Mozilla Firefox இணையத்தில் உள்ள தகவல்களை பார்வையிடுவதற்காகவும் Avast கணினியில் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.


அதேபோல் தான் நாம் vbஇல் உருவாக்க நினைக்கும் மென்பொருளும் ஒரு பிரச்சினை தீர்ப்பதற்காகவே உருவாக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.எடுத்த எடுப்பிலையே ஒரு மென்பொருள் vb இல் உருவாக்கபட மாட்டாது , அதற்கு நான்கு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் அப்பதான் அந்த மென்பொருள் வெற்றிகரமாக இயங்கும் இல்லாவிட்டால் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரும்.சரி அந்த நிபந்தனைகள் என்ன என்று பார்ப்போம்.

01.பிரச்சினையை பகுப்பாய்வு செய்தல்

ஒரு சின்ன மென்பொருள் உருவாக்குவது எப்படி என்று சொல்கிறேன்.நீங்கள் ஒரு மென்பொருள் பொறியியளார் எனவும் நான் ஒரு பாடசாலையின் ஆசிரியர் எனவும் கற்பனை செய்து கொள்க.நான் உங்களிடம் வந்து எனக்கு ஒரு மென்பொருள் உருவாக்கி தாருங்கள் அது எப்படி இருக்க வேண்டும் என்றால் என்னுடைய வகுப்பில் ஒவ்வொரு மாணவர்களும் முதலாம் தவனையில் 3 பாடங்களில் பெற்ற புள்ளிகளை கொடுத்தால்.... அந்த மாணவன் 3 பாடங்களிலும் பெற்ற மொத்த புள்ளியும் சராசரியும் எனக்கு காட்ட வேண்டும் இதை உங்களால் செய்து தரமுடியுமா?என்று கேட்கிறார்......நீங்களும் சரி என்று சொல்லி விட்டீர்கள் என வைத்து கொள்வோம்.

இங்கு நாம் யாருடைய பிரச்சினை தீர்ப்பதற்காக மென்பொருள் உருவாக்க போகிறமோ... அவர் சொல்வதனை நன்கு அவதானமாக கேட்க வேண்டும்... பின்னர் அந்த பிரச்சினைக்குறிய வெளியீடு என்ன?என்று பார்க்க வேண்டும் (அவர் இறுதியாக என்ன எதிர்பார்க்கிறார்).மேலே சொன்ன பிரச்சினையில் குறித்த மாணவன் 3 பாடங்களிலும் பெற்ற புள்ளியும் சராசரியும் வெளியீடாக காணப்படுகிறது.

அடுத்ததாக அந்த வெளியீட்டை பெற வேண்டும் என்றால் எதனை நாம் உள்ளீடாக வழங்க வேண்டும் என்று , மேலே சொன்ன பிரச்சினையில் மொத்த புள்ளி காணவேண்டும் என்றால்,  மாணவன் 3 பாடங்களிலும் பெற்ற புள்ளிகள் தேவை அது இங்கு உள்ளீடாக காணப்படுகிறது.

அடுத்தாக அதன் செயற்பாடு என்ன?என்று பார்க்க வேண்டும், மொத்த புள்ளியை காண்பதற்கு 3 பாடங்களிலும் பெற்ற புள்ளியை கூட்ட வேண்டும் மற்றும் சராசரியை காண்பதற்கு மொத்த புள்ளியை 3  இனால் பிரிக்க வேண்டும் என்பது மேலே சொன்ன பிரச்சினையின் செயற்பாடு ஆகும்.

அடுத்த தொடரில் இது பற்றி மேலும் பார்ப்போம் இணைந்து இருங்கள்.


2 comments Blogger 2 Facebook

  1. நன்றி நண்பரே தொடருங்கள் ....

    ReplyDelete
  2. Good. Continue. A small suggestion. Try not use pure Tamil words. " uileedu" some thing like that.

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top