துரித காலத்திற்குல் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டு வரும் Airtel நிறுவனம் மற்ற நிறுவனங்கள் வழங்காத புது புது சலுகைகளை வழங்கி ஏனைய வாடிக்கையாளரை தனது பக்கம் இழுத்து கொண்டு இருக்கிறது.இது தப்பு என்று நான் சொல்ல வில்லை அப்படி அவர்கள் வழங்கும் சலுகைகளை தொடர்ந்து வைத்திருப்பதில்லை வைத்து இருந்தாலும் அதை ஒழுங்காக வழங்குவது இல்லை என்பதே எனது கருத்து.
எடுத்துக்காட்டாக ஆரம்பத்தில் பல வகையான சேவைகளை வழங்கினாலும் காலபோக்கில் நிறுத்திவிடும் தன்மையை கொண்டது என்பதை Rs.45 இற்கு 1500MB Data வை நிறுத்தியதில் நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள்.
Bonus Talk Time என்ற பெயரில் இவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை. இதை பயன்படுத்த வேண்டும் என்றால் Main Balance Rs.0.00 ஆக இருக்க வேண்டுமாம்.நாம் யாருக்காவது அழைப்பு மேற்கொண்டால் முதலில் Main Balance இல் தான் கழியும் (Bonus Talk Time இருந்தாலும் கூட) சரி என்று விட்டால் Main Balance Rs.10.00 இற்குல் வந்தால் "Your account balance is insufficient. Please dial 55544 to recharge your account soon." இந்த SMS ஐ அனுப்பிக்கொண்டே (Call எடுத்தால் மாத்திரம்) இருப்பார்கள்.
அதாவது
நாம் அடுத்தவருக்கு Call எடுக்கும் போது Main Balance இல் காசு இருந்தா அதை முதலில் கழித்து விடுவார்கள் (Bonus Talk Time எவ்வளவு இருந்தாலும் சரி) அப்படி கதைத்து கொண்டு போகும் போது Main Balance ஆனாது 10 இற்குல் வந்தால் Your account balance is insufficient. Please dial 55544 to recharge your account soon." என்று SMS அனுப்புவார்கள்.
Main Balance ஐ விட்டுப்போட்டு Bonus Talk Time ஐ பாவிப்போம் என்று முடிவு எடுத்தால் அதை வைத்து உள்நாட்டுக்குல் மாத்திரமே அழைப்பை மேற்கொள்ள முடியும்.வெளிநாட்டுக்கு அழைப்பை மேற்கொள்ள முடியாது.அப்படி வெளிநாட்டுக்கு அழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றால் Main Balance இல் காசு போட வேண்டும்.என்ன கொடுமை இது!
சரி இவன்டா Data Planஉம் வேனா ஒரு மண்னங்கட்டியும் வேனா என்று எல்லாவற்றையும் நிறுத்தினா ,அதோட மோசமான சேவையை வழங்குரானுகள்.அதாவது ஒரு SMS இற்கு நிமிடத்திற்கு அரவிடும் கட்டணம் எடுக்கானுகள் என்ன செய்வது?
Main Balance இல் காசு போட்டாலும் பிரச்சினை போடாவிட்டாலும் பிரச்சினை.அவர்களுடைய Data Plan ஐ அக்டிவ் செய்தாலும் பிரச்சினை அக்டிவ் செய்யா விட்டாலும் பிரச்சினை.
சரி போனா போகட்டும் குறைந்தது இந்த SMSயை யாவது நிறுத்தி வைப்போம் என்று வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டு சொன்னால் , மொத்தமாக நிறுத்தி விடுகிறார்கள்.அதாவது Main Balance பார்த்தால் (*550#) மட்டுமே அதை தொடர்ந்து வரும் SMS இல் எவ்வளவு Bonus Talk Time & Free Data & SMS இருக்கிறது என்று தெரியும்.ஆனால் நான் கேட்டது Call எடுத்த பிறகு வரும் SMS ஐ தான் நிறுத்த வேண்டும் என்று சொன்னேன் அதை நிறுத்தனால் Main Balance பார்த்த பின் வரும் SMS வருகிறது இல்லை!
இந்த பிரச்சினையை மீண்டும் வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டு சொன்னால் அவர்கள் சொல்கிறார்கள் அது எல்லாம் (SMS) ஒன்றாக இருக்கிறது ஒன்றை நிறுத்தினால் மொத்தமாக அனைத்தும் நின்று விடும் என்று .என்ன செய்வது Balance பார்க்க வேண்டும் அல்லவா? On செய்து விட்டேன்
ஏனைய நிறுவனங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு குறைந்த கட்டணத்தில் புதிய புதிய சலுகைகளை வழங்குவது பெரிதல்ல! அதனால் வாடிக்கையாளருக்கு ஏற்படும் பிரச்சினையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களுடைய வாடிக்கையாளர் சேவை பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.
பதிவு நீளமாக இருப்பதால் அடுத்த பதிவில் கூறுகிறேன்
Nimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.
https://plus.google.com/115862170522466121930
https://www.facebook.com/pages/Nimzathcom/261622770552692
0 comments Blogger 0 Facebook
Post a Comment