ms word இல் ஒரு Document ஐ வேகமாக தயார் செய்து கொள்வதற்கு இந்த Clipboard நமக்கு பெரிதும் உதவுகிறது.எப்படி என்றால் ஒரே வசனத்தை திரும்ப திரும்ப கொப்பி செய்து கொள்ளாமல் ஒரு முறை மாத்திரம் கொப்பி செய்து கொண்டால் போதும் நாம் விரும்பிய இடத்தில் இதை paste செய்து கொள்ள முடியும்.இப்படி இதில் நாம் 24 வசனத்தை சேமித்து வைத்து கொள்ள முடியும்.இதில் வசனம் மற்றும் என்று இல்லை படங்களையும் சேமித்து வைத்து கொள்ள முடியும்.
நாம் வழக்கமாக Type பன்னும் போது ஏற்கனவே வந்த வசனம் மீண்டும் வந்தால் அதை நாம் கொப்பி செய்து (ctrl+c) paste செய்து விடுவோம் (ctrl+V) மீண்டும் ஒரு வசனம் Type செய்தது வந்தால் மீண்டும் கொப்பி (ctrl+c) செய்து paste செய்து விடுவோம் (ctrl+V) ஆனால் முதல் கொப்பி செய்த வசனம் மீண்டும் தேவைப்பட்டால் இந்த Clipboard இல் அதை கொப்பி செய்ய வேண்டியதில்லை அந்த வசனத்தின் மீது ( ஏற்கனவே கொப்பி செய்து கொண்டது Clipboard இல் இருக்கும் அதன் மீது ) கிளிக் செய்து கொண்டால் போதும் குறிப்பிட்ட இடத்தில் அந்த வசனம் கொப்பி செய்யாமலே paste ஆகிவிடும்.
இது வழக்கம்போல கொப்பி செய்வதுதான் ஆனால் கொப்பி செய்யும் முன் இந்த Clipboard ஐ திறந்து வைத்துக்கொள்ளுங்கள்
தேவையான வசனத்தை அதன் மீது கிளிக் செய்து கொண்டால் போதும்
விளக்கத்திற்கு நன்றி. இந்த மாதிரி வசதி இருக்கிறது என்று தெரிந்தாலும் அதிகமாக உபயோகப்படுத்தினதில்லை.
ReplyDelete