ஒரு சிறிய சந்தேகம் கேட்டால் கூட பதில் சொல்ல முடியாத அளவு இருக்கிறார்கள்.எனக்கு இவர்களுடன் பேசவே விருப்பம் இல்லை ஏன் என்றால் தாம் வேலை செய்யும் நிறுவனம் பற்றி அரவே தெரியாத எருமை மாடுகள்.

வாடிக்கையாளருடைய கேள்வியை புரிந்து கொள்ள முடியாத முட்டால்கள்.அவர்களுக்கு பதில் தெரியாவிட்டால் 2 காரணங்கள் சொல்வார்கள் நீங்கள் நன்றாக கேள்விப்பட்ட காரணங்கள்தான் 

01.அது தொழில்நுட்ப பிரச்சினை 
02.அந்த சேவையை நாம் இன்னும் வழங்க வில்லை 

அப்படி இப்படி என்று சம்பந்தமே இல்லாமல் வேறு ஏதாவது காரணங்கள் கூறிக்கொண்டு இருப்பார்கள்.எனக்கு சில நேரங்களில் இவர்களுடைய பதிலுக்கு ஆத்திரம் தான் வரும் என்ன செய்வது (ஒன்டும் செய்ய முடியாதே என்பதற்காக) அழைப்பை துண்டித்து விடுவேன்.

ஒரு சின்ன சந்தேகம் கேட்டேன், பேஸ்புக் இனை நான் Airtel இல் SMS மூலமாக  பாவிக்கிறேன்.(ஏற்கனவே நான் எழுதிய Facebook ஐ Airtel மூலம் இலவசமாக உபயோகிக்க இந்த பதிவு எழுதும் போது கேட்டது) இதற்கு என்னிடம் எந்தவித கட்டணமும் அரவிடுகிறார்கள் இல்லையே! இந்த வசதியை எவ்வளவு நாளைக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் என்று கேட்டேன்.அவர்களுடைய பதில் என்ன தெரியுமா?

நாம் இன்னும் பேஸ்புக்குடன் இணையவில்லை.பேஸ்புக் இல் Airtel நம்பரை பாவிக்க முடியாது. அப்படி பாவிக்க முடிந்தால் உங்களுக்கு அறியத்தருவோம். (பேஸ்புக்கை Airtel இல் SMS  மூலம் இலவசமாக பயன்படுத்த முடியும் என்பது கூட அவர்களுக்கு தெரியாது)

நான் இதை பல நாட்களாக பயன்படுத்துகிறேன் என்று சொல்ல அவர்கள் இல்லை சேர் இது ஒரு தொழில்நுட்ப பிரச்சினை என்று நிறுத்தி விட்டார்கள்.

நான் அவர்களுக்கு அழைப்பை மேற்கொள்வதற்கு எத்தனையோ மாதத்திற்கு முன் Airtel நிறுவனம் பேஸ்புக்குடன் இணைந்து விட்டது அது கூட தெரியாமல் ஏன் தான் அந்த நிறுவனத்தில் வேலை செய்றானோ என்று எனக்கு தெரியவில்லை.

அது மட்டுமா? Data Plan ஐ அக்டிவ் செய்ய 2 வழிகள் மாத்திரமே உள்ளது.1 அந்த தொகையை ரீலோட் செய்வது 2வது குறிப்பிட்ட Data Plan ஐ உடைய காட்டை வாங்கி போடுவது என்பதை நீங்கள் எல்லாம் அறிந்து இருப்பீர்கள்.ஆனால் என்னுடைய நண்பர் இன்னும் ஒரு முறையில் என்னிடம் Data Plan ஐ அக்டிவ்  செய்து காட்டினார்.அதாவது Main Balance இல் இருக்கும் தொகையை கொண்டு விரும்பிய Data Plan ஐ தெரிவு செய்து கொள்ளும் முறை (Airtel இல் இந்த வசதி இருப்பது பெரும்பாலானோர் அறிந்து இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்)

நான் 99 ரூபா Data Plan ஐ அக்டிவ் செய்ய , ரீலோட் பன்ன போன நான் ரூபா 100 இற்கு ரீலோட் செய்து விட்டேன்.சரி பரவாயில்லை எப்படியும் அக்டிவ் செய்யலாம் (Main Balance ஐ கொண்டு ) என்று என்னி (டயலொக்,மொபிடல் , எடிசலாட்டில் எல்லாம் இப்படித்தான் நான் செய்வேன்) மற்றவர்களிடமும் கேட்டுப் பார்த்தேன் தான் ஒரு நாளும் Main Balance ஐ கொண்டு அக்டிவ் செய்ததில்லை என்று சொன்னார்கள்.இவர்களுடைய கதையை விட்டுப்போட்டு எனக்கு அக்டிவ் செய்து காட்டியவரிடம் அழைப்பை மேற்கொண்டேன் துரதிஸ்ட வசம் அவருடைய போன் OFF பன்னி கிடந்து விட்டது. சரி என்று வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழப்பை மேற்கொண்டு நடந்த பிரச்சினையை எடுத்துக்கூறிவிட்டு இதற்கு ஏதாவது மாற்று வழிகள் உண்டா? (அதாவது Main Balance  ஐ கொண்டு எப்படி விரும்பிய Data Plan ஐ தெரிவு செய்வது என்று கேட்டேன்)

அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? அப்படி ஒரு வசதியே Airtel இல் இதுவரை நாம் வழங்க வில்லை நீங்கள் ரீலோட் செய்யுங்கள் அல்லது விரும்பிய டேட்டா ப்ளான் காட் வாங்கி போடுங்கள்.

நான் விடுவேனா? என்னுடைய நண்பர் Main Balance  ஐ கொண்டு விரும்பிய டேட்டா ப்ளானை தெரிவு செய்து கொள்ள முடியும் என்று சொன்னாரே என்று சொன்னத்திற்கு மறுபடியும் அதே பதிலை வழங்கினார்கள்.

எனது நண்பர் எனக்கு Call எடுத்தார்.அவரிடம் நடந்ததை கூறினேன் நீ இப்படி செய் என்றார் பிரச்சினை முடிந்தது.அப்படி அவர் என்ன சொன்னார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.வேறு ஒன்றும் இல்லை 123 இற்கு அழைப்பை மேற்கொண்டு கட்டளையை பின்பற்று, அவர்கள் ஒவ்வொரு டேட்டா ப்ளான்களை கூறிக்கொண்டே வருவார்கள் உனக்கு விரும்பிய டேட்டா ப்ளானை தெரிவு செய்து கொள் , அது பற்றிய விபரம் சொல்வர்கள் சொல்லி முடிந்த பிறகு 1 இனை அழுத்து பின் உறுதிப்படுத்தவதற்கு மீண்டும் 1 இனை அழுத்து என்று சொன்னார் நானும் செய்தேன் அவ்வளவுதான் என்னுடைய பிரச்சினையை முடித்துக்கொண்டேன்.

இதற்கு அந்த பாவி (வாடிக்கையாளர் சேவை) சொன்னான் பாரு ஒரு வார்த்தை இன்னும் அந்த வசதியை நாம் வழங்க வில்லை.பண்டி!, 123 இற்கு அழைப்பை மேற்கொண்டு கட்டளைகளை பின்பற்றுங்கள் என்று சொல்ல தெரியாத நீ எல்லாம் எண்னத்துக்குடா Airtel இல் வேலை செய்கிறாய்.

இவர்களுக்கு இரண்டு தரம் அழைப்பை மேற்கொண்டு இருப்பேன் இரண்டு பேரும் ( முதல் எடுக்கும் போது தூக்கியது ஒரு பெண் அதற்கு பிறகு எடுக்கும் போது தூக்கியது ஒரு ஆண்) கூறியது ஒரே பதில்தால்தான்

இன்னும் ஒரு சம்பவத்தை கூறுகிறேன்.இப்படித்தான் ஒரு சந்தேகம் கேட்டு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டேன் இறுதியில் ஒரு கேள்வி கேட்டேன் வாடிக்கையாளர் சேவைக்கு ஒரு மாதத்திற்கு எத்தனை முறை அழைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்று? அவர்கள் சொன்னார்கள் 2 முறை என்று நான் சொன்னேன் இது நான் உங்களிடம் பேசுவது இந்த மாதத்தில் 13வது முறை என்றேன் அதற்கு அவர்கள் சொன்ன பதில் அது எங்கட தொழில்நுட்ப பிரச்சினை சேர் என்றார்கள்.

நான் மட்டும் அல்ல எனது நண்பர்களும் ஒரு மாதத்திற்கு 2 இற்கு மேல்தான் கதைப்பார்கள்.


ஆனால் ஏனைய வலையமைப்புக்களில் (டயலொக்,மொபிடலில்) ஒரு மாதத்திற்கு 2 முறை மட்டுமே வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழைப்புக்களை மேற்கொள்ள முடியும்.அதற்கு மேல் எடுக்க வேண்டும் என்றால் ரூபா 2 கட்டணமாக அரவிடப்படும். அவர்கள் கூறும் பதில் நமக்கு திருப்த்தியாக இருக்கும், இல்லா விட்டால் அந்த நிறுவனத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு நம்முடைய முறைப்பாடுகளை அனுப்பி வைத்து கொள்ளும் வசதியும் காணப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் அதற்குறிய பதிலை 72 மணித்தியாலயங்களில் அவர்களே நமக்கு Call எடுத்து சொல்வார்கள்.இது பிர வலையமைப்புக்களில் காணப்படுகிறது.

இப்படி என்னால் ஒவ்வொரு சம்பவங்களை கூறிக்கொண்டே போக முடியும்.பதிவு நீளமாக இருப்பதால் தவிர்த்து கொள்கிறேன்.நான் எத்தனையோ தரம் Airtel இன் வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழைப்புக்களை எடுத்து இருப்பேன்.ஒரு தரம் கூட திருப்த்தியான பதில் வழங்கவில்லை.அவர்களை விட உயர் அதிகாரிகளுடன் பேசும் வசதியும் இந்த Aitel இல் இல்லை என்பது எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது


வெளியில் இருந்து பார்த்தால் Airtel இற்கு மாறனும் போல் தோன்றுகிறது ஆனால் உள் இருந்து பார்த்தால் ஏன்டா மாறினோம்? என்று இருக்கு


மேலே சொல்லப்பட்ட பிரச்சினைகளை Airtel நிறுவனம் எப்போதுதான் கவணத்தில் கொள்ளுமே என்று தெரியாது.குறைந்தது இந்த செய்தி பல பேருக்கு சென்றடைய திரட்டிகளில் வோர்ட் போடுங்கள் மற்றும் சமூக வலைதளங்களான Facebook , Google + , Twitter போன்றவற்றிலும் Share செய்து உங்கள் நண்பர்களுக்கும் தொறியப்படுத்துங்கள்.

Nimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.5 comments Blogger 5 Facebook

 1. சொடுக்கி கேளுங்க‌ள்

  >>>> 1. ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால‌ சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? <<<<<<

  சொடுக்கி கேளுங்க‌ள்

  2. >>>>>
  பிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையான‌து? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik.

  இறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
  அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.
  . <<<<<

  .

  ReplyDelete
 2. நண்பா கோடிங்கை சரி செய்திருக்கிறேன்


  வீடியோ பதிவு

  How to Enable Threaded Comments in Blogger

  http://www.youtube.com/watch?v=LsVV2nyfIEM&feature=player_embedded


  நீங்கள் பிளாக்கர் defalut template மாறி விட்டு வேறு template க்குமாரினால் இந்த வசஹி கிடைத்து விடும் ..
  நன்றி ..

  ReplyDelete
 3. ஆம் நண்பரே நானும் இப்படி பலமுறை சம்பந்தமில்லாத பதில்களை அவர்களிடம் இருந்து பெற்றிருக்கின்றேன் சாதாரண Airtel பாவனையாளருக்கு தெரிந்த விடயம் கூட அங்கு வேலை செய்யும் வாடிக்கையாளர் சேவை முகவர்களுக்கு தெரியாது,நானும் பல முறை அவர்களுடன் சண்டை பிடித்திருக்கிறேன் அவர்கள் ஒரே பதிலையே திருப்பி திருப்பி கூறுகிறார்கள் இதை யாரிடம் போய் சொல்வது என்று விட்டு விட்டேன்.

  ReplyDelete
 4. சொடுக்கி கேளுங்க‌ள்

  >>>> 1. ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால‌ சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? <<<<<<

  சொடுக்கி கேளுங்க‌ள்

  2. >>>>>
  பிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையான‌து? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik.

  இறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
  அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.
  . <<<<<

  .

  ReplyDelete
 5. nee solra reason'na nan accept panren boss neega periya geniuses'sa irukalam but enaku theriju unga call airtel'ku direct'ta connect aagathu adu oru call center'ku connect aagum anga unga kitta pesura ellarum engineering mudichavanga kidaiyathu 12'th mudichavan kuda anga irupaan, and technical fault'nu solranganeega adu eppa occurring aagumnu oru scheduling irukum adu airtel server office'la irundu mail varum appathan avangaluke therium so edaum therinjukaama pesadeenga apdi unaku thettanumnu thonuchuna nodal officer number or Trai'ku contact pannuga kandipa special responce irukum trai address: http://www.trai.gov.in/ContactUs_List.aspx

  ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top