பதிவுகளை SMS மூலம் அனுப்புவது எப்படி?என்று பல பேர் ஆவலாக கேட்டுக்கொண்டீர்கள்.(என்னுடைய இணையதளத்தின் செய்திகளை உங்கள் கையடக்க தொலைபேசியில் இலவசமாக பெறுவதற்கு இங்கே செல்லவும்)....ஒரே நேரத்தில் ஒரு செய்தி இலவசமாக எப்படி பல பேரை சென்றடைய முடியும்? அது எப்படி? என்று உங்களுக்குல் பல சந்தேகங்கள் எழுந்து இருக்கலாம்...இது எப்படி என்று பார்ப்பதற்கு முதல் http://twitter.com இற்கு சென்று ஒரு புதிய கணக்கு ஒன்றை திறந்து கொள்ளுங்கள்..பதிவுகளை SMS மூலம் அனுப்புவதாக இருந்தால் மட்டும் twitter Username ஐ உங்கள் வலைப்பூவின் பெயரில் அல்லது இணையதளத்தின் பெயரில் வைத்து கொள்ளுங்கள்.



சென்ற வருடம் twitter நிறுவனம் Fast Follow என்ற ஒரு வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது.இதன் மூலம் twitter இல் உங்களுக்கு பிடித்தவர்களை  SMS மூலம் Follow பன்னி கொள்ள முடியும். இது குறிப்பிட்ட அளவு நாடுகளின் குறிப்பிட்ட அளவு வலையமைப்பு  வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த வசதியை வழங்கியுள்ளது என்பதை கவணத்தில் கொள்ளவும்.

சரி Fast  Follow  முறையில் எப்படி பின்தொடர்வது மற்றும் செய்திகளை அனுப்புவது  என்று பார்ப்போம்.

பின் தொடர்வதற்கு  கீழ் கண்டவாறு ஒரு SMS ஒன்றை அனுப்பவும்

Follow இடைவெளி nimzath என டைப் செய்து 40404 இற்கு அனுப்பவும்.

Follow என்பதற்கு பதிலாக F என்றும் கொடுக்கலாம்

nimzath என்பதற்கு பதிலாக உங்களுடைய twitter Username  ஐ கொடுக்கவும்.

40404 என்பது இலங்கை நாட்டுக்குறிய twitter, குறுகிய இலக்கமாகும்...இது ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு வலையமைப்புக்கும் மாறும்...இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு இங்கே

Fast Follow  முறையில் நீங்கள் ஒருவரை பின்தொடரும்போது twitter இல் உங்களுக்கு கணக்கு இருக்க வேண்டும் என்பது காட்டாயம் இல்லை என்பதை கவணத்தில் கொள்ளவும்.

பதிவுகளை அனுப்புவதற்கு வழமையான முறையில் நீங்கள் Tweet செய்தால் சரி, உடனடியாக  உங்களை Follow  பன்னுபவர்களுக்கு SMS மூலம் அனுப்பி வைக்கப்படும்.யுனிகோடில் Tweet  செய்ய வேண்டாம்.

1 comments Blogger 1 Facebook

  1. Nimzath என்ற பெயர் தற்போது Airnews1st என மாற்றப்பட்டுள்ளது...

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top