ஒரு PTC  தளத்தில் இணையும்முன் கவணிக்க வேண்டியது நிறைய இருக்கிறது  அதையும் தெரிந்து கொள்ளுவோம் ஏனென்றால் ஒரு சில பேர் போலியான தளம் என்று தெரியாமல் அவர்களும் ஏமாற்றம் அடைந்து உங்களையும் ஏமாற்றுகிறார்கள்.  ஒவ்வொரு நாளைக்கு எத்தனையோ PTC தளங்கள் ஆரம்பிக்கபடுகின்றன இவைகள் நிலைத்து நிற்பது கொஞ்ச நாட்கள் தான்.தொடர்ச்சியாக நிலைத்து நிற்கும் தளத்தில் இணைவதுதான் சிறந்தது.


01. PTC தளத்தில் இணைவதற்கு என்று ஒரு இமெயில் முகவரி ஒன்றை ஆரம்பித்து வைத்துக்கொள்ளவும் ஏனென்றால் உங்களுக்கு பல Spam மெயில்கள் வரலாம் கவணமாக இருக்கவும்.
02.ஒரு தளம் போலியான தளமா? இல்லையா? என்று கண்டுபிடிப்பது எப்படி? google மூலம் இதை இலகுவாக தெரிந்தகொள்ள முடியும்       உதாரணமாக,.தளத்தின் பெயர் scam? என்று தேடவும்   ( vcbux.com scam? )
03.அவர்கள் பணம் கொடுத்தமைக்கு ஏதாவது  ஆதாரம் வைத்து இருக்கிறார்களா? (payment Proof)  என்று பார்க்கவும்.
04.மொத்தமாக எத்தனை Member இருக்கிறார்கள்.
05.இதுவரைக்கும் எவ்வளவு செலுத்தி இருக்கிறார்கள்
06.எந்த முறையில் பணம் அனுப்புவார்கள் (PP or AP )
07.pay per click, pay per ref click , payout minimum போன்றவற்றையும் பார்க்கவும்.
08.அந்த தளம் பற்றி மேலதிக விபரங்களை Forum இல் சென்று பார்க்கவும்

அது என்ன PayPal or Alertpay?

இதன் மூலம் தான் நீங்கள் சம்பாதித்த பணத்தை உங்கள் கைக்கு கொண்டுவர முடியும்.இவை இரண்டும் இணைய வங்கிகளாகும்.இணையத்தில் இருந்து பொருட்களை வாங்குவதற்கு அல்லது சேவைகளை பெறுவதற்கு இவை இரண்டும் துனைபுரிகிறது.

நான் தாங்களுக்கு  Alerpay இல் இணையுமாறு பரிந்துறை செய்கிறேன் ஏன் என்றால் இரண்டு காரணம் ஒன்று பாதுகாப்பு மற்றையது என்னுடைய நாடு,  paypal மூலம் இலங்கையில் இருப்பவர்கள் பணத்தை பெற்றுக்கொள்ள முடியாது  என்பது.


Alerpay இல் ஒரு கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்கு எந்த ஒரு பணமும் செலுத்த வேண்டியதில்லை (இலவசம்) , குறைந்தது இவ்வளவு பணம் நமது கணக்கில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.இதனை ஆரம்பிப்பதற்கு தேவையானது ஒரு மின்னஞ்சல் முகவரி மாத்திரமே அப்படி என்றால் பணத்தை எங்கே போய் பெற்றுக்கொள்வது??? நீங்கள் AP இல் கணக்கு ஆரம்பித்ததும் உங்கள் வங்கி கணக்கு இலக்கம் உங்கள் இமெயில் முகவரிதான் சரியா...உங்களுடைய இமெயில் அட்ரசுக்கு பணம்(PTC தளம் மூலம் பெற்றது) வந்தால் உங்களுடைய AP கணக்கில் பணம் சேர்ந்துவிடும்.இதில் இருந்து பணத்தை நம்முடைய கைக்கு கொண்டுவர வேண்டும் என்றால் ஒரு வங்கி கணக்கு மிக மிக முக்கியமாக தேவை இல்லா விட்டாலும் பரவாயில்லை புதிதாக ஒரு வங்கி கணக்கை ஆரம்பியுங்கள் AP இல் இருந்து நம்முடைய நாட்டில் இருக்கும் நம்முடைய வங்கி கணக்குக்கு பணத்தை பெற்றுக்கொள்வது எப்படி என்று பிறகு பார்ப்போம் ( எல்லோரும் வங்கி கணக்கை ஆரம்பிக்கட்டுமே சரியா.....காத்திருங்கள்.....)

AP இல் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

>> முக்கியமாக நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் மகவரியைக்கொண்டு பதிவு செய்யுங்கள்.
>> password கொடுக்கும் போது இடையில் குறியீடுகளையும் ( ^@-*!$~) பயன்படுத்தவும்.
>>  தங்களுடைய நாடு , முகவரி , எல்லாவற்றையும் சரியாக கொடுங்கள்.
>> இணைந்து கொள்வதற்கு இங்கே




Alertpay இல் Verification செய்ய வேண்டாம்,இது பற்றி பின்னர் தெளிவாக விளக்கம் தரப்படம் காத்திருங்கள்.


50 DR வைத்துவிட்டு நாம் விளம்பரத்தை  க்ளிக் செய்யாமல் இருந்தால் பணம் நம்முடைய கணக்கில் சேருமா?ஆகா....இப்படி செய்தால் எதுவுமே கிடைக்கது அதாவது நீங்கள் விளம்பரத்தை பார்த்தால் தான் உங்களால் நியமிக்கப்பட்ட DR மூலம் சம்பாதிக்க முடியும்.நீங்கள் இன்று விளம்பரம் பார்வையிடாவிட்டால்  DR க்ளிக் செய்தாலும் பணம் கிடைக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.அடுத்து ஒரு நாளைக்கு ஒரு விளம்பரத்தை ஒரு முறைதான் பார்வையிட முடியும் மீண்டும் அந்த விளம்பரத்தை பார்வையிட்டால் பணம்கிடைக்காது அதற்காக 24 மணித்தியாளம் காத்திருக்க வேண்டியதில்லை அவர்களுடைய server time(விளம்பரம் பார்வையிடும் இடத்தில் இருக்கும்) 00:00 இற்கு வந்தால் நாம் மீண்டும் பார்வையிடலாம்.

விளம்பரங்கள் பார்வையிடும் முன் அல்லது பார்த்த பின்  உங்களை பரிசோதிக்கும் அதாவது நீங்கள் இயந்திரமா? அல்லது மனிதனா? என்று எப்படி என்றால் 5 படங்களை காட்டி இதில் எது தலை கீழாக இருக்கிறது என்று கேட்கும் அல்லது ஒரு இலக்கத்தை காண்பித்து விட்டு இது எத்தனை என்று கேட்கும். இது போன்ற ....,  இதற்கு உங்கள் பதில் சரியாக இருந்தால் மாத்திரமே பணம் சேரும்.

>>நீங்கள் எதிர்பார்த்த நல்ல நல்ல PTC தளங்கள் அடுத்த பதிவில்......
>> PTC சம்பந்தமான உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் nimsath92@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

2 comments Blogger 2 Facebook

  1. உங்களைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
    நேரம் இருந்தால் பார்க்கவும்..
    பிளாகர் மற்றும் கம்ப்யூட்டர் டிப்ஸ் - தொழில்நுட்ப புதன்

    ReplyDelete
  2. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top