இன்று நாம் இணையத்தில் பைல்களை சேமித்து வைப்பதற்கு மிகச்சிறந்த தளம் ஒன்றை பற்றி பார்க்கப்போகிறோம்.அதாவது ஏணைய தளங்களை காட்டிலும் நல்ல தளம் ஏண் தெரியுமா? இலவசமாக சேமித்து வைப்பதற்கு நிறைய தளம் இருக்கிறது, ஆனால் நம்முடைய பைலை upload செய்த பிறகு, திரும்ப download செய்ய வேண்டும் என்றால் அந்த பைலை இலவசம் என்றால் ஆமை வேகத்தில் தான் download செய்ய முடியும் என்றும், எங்களுக்கு டாலர் இவ்வளவு செலுத்தினால் இவ்வளவு மாதம் வரைக்கும் நீங்கள் குதிரை வேகத்தில் download செய்ய முடியும் என்றுதான் அவர்களுடைய சேவையை வழங்கி வருகிறார்கள் இப்படி டாலர் கட்டாமல் இந்த சேவையை வழங்கும் ஒரு தளம் உள்ளது அதைப்பற்றித்தான் இன்றைய பதிவு.




நாம் இப்படி இணையத்தில் சேமித்து வைக்கும் போது அந்த பைலை இரண்டு விதமாக பிரிக்க முடியும். எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள விருப்பம் என்றால் public ஆகவும், நாம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் அதாவது பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லை என்றால் private ஆகவும் சேமிக்க முடியும். என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் private  ஆக சேமித்த பைல், தேடுஇயந்திரங்களில்தான் வராது ஆனால் நீங்கள் MediaFire இல் Custom URL ஏற்படுத்தி இருந்தால், அந்த URL மூலம்  private   ஆக சேமித்த பைலை யார் வேண்டுமானாலும் download செய்யலாம் தெரியுமா?

என்னடா...புரியவில்லையா??? பயப்படாதீங்க... இந்த பிரச்சினை யாருக்கு வரும் என்றால்  Custom URL  ஐ தெரிவு செய்யும் போது அது எந்த Folder என்று கேட்கும் அதற்கு நீங்கள் My Files என்பதை தெரிவு செய்து இருப்பீர்களாயின் அந்த Custom URL  மூலம் நீங்கள் சேமித்த அனைத்து பைலையும் download செய்ய முடியும்.( Custom URL மற்றும் அதற்குறிய Folder ஐ திரும்பவும் மாற்றிக்கொள்ள முடியும். custom URL ஐ பெறுவது எப்படி? இந்த பதிவை படிக்கவும்.)
 
இந்த தளத்தில் காணப்படும் சிறப்பம்சங்கள்


 01.குறித்த முக்கியமான பைல் இற்கு password கொடுக்கலாம்.இதனால் நீங்கள் அந்த பைல் ஐ public ஆக சேமித்தால் கூட உங்களுடைய password வேண்டும் அந்த பைல்  ஐ download செய்வதற்கு.


02 private Folder -  Custom URL இல் கூட தெரியுதில்லை  அந்த Folder.

03. Drag and Drop முறையிலும் Upload செய்ய முடியும்.

04. எத்தனை முறை Download செய்யப்பட்டது என்று பார்க்கலாம்.

05.குறித்த பைலை இமெயில் மூலம் அனுப்ப முடியும்.

06.இதில் download செய்யும் போது வேகம் குறைக்கப்படாது.




இங்கு சென்று நீங்கள் இலவசக்கணக்கு ஒன்றை ஆரம்பிக்கவும்.இதில் இலவசமாக குறைந்த அளவுதான் சேமித்து வைக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

3 comments Blogger 3 Facebook

  1. ஆம் மிக நல்ல தகவல்.....

    ReplyDelete
  2. உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
    பார்க்கவும்: சனி தொழில்நுட்ப சரமாக

    ReplyDelete
  3. நன்றி நண்பரே, என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top