இன்று நாம் பார்க்கப்போவது அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கின்றேன்.ஏனென்றால் நம்மிடம் சில சிறிய மென்பொருள்கள் இருக்கும் அது கணினியில் install செய்யாமலேயே வேலைசெய்யும் அதைக்கொண்டு எப்படி டம்மி மென்பொருள் உருவாக்குவது. அதாவது அது கணினியில் நிறுவுவது மாதிரி , அதை All Programs இல் சேர்ப்பது,Desktop இல் Shortcut Icon ஆக தோன்றவைப்பது எப்படி என்று பார்ப்போம்.





டம்மி மென்பொருள் உருவாக்க நினைக்கும் Folder அல்லது File இன் மீது  Right click செய்து   Add to Archive, Archiving Options > Create SFX archive , Create solid archive, Advanced >SFX options இங்கு செல்லவும். இது நாம் ஏற்கனவே பார்த்தது என்பதால் சுருக்கமாக தந்துள்ளேன்.

இனித்தான் நமக்கு புதுவிசயம் வருகின்றது, Path to extract என்பதற்கு கீழ் இருக்கும் பெட்டியில் Program Files இற்குல் என்ன Folder உருவாக்க வேண்டும் என்பதை டைப் செய்யவும்.

அடுத்து Setup program என்பது அந்த மென்பொருளை கணினியில் நிறுவிய பின் தானாகவே இயங்க வைப்பது,  நீங்கள் Folder இன் மீது Right click செய்து வந்திருப்பின் Run after extraction என்பதற்கு கீழ் இவ்வாறு டைப் செய்யுங்கள். அந்த Folder இன் பெயர் \ மென்பொருளின் பெயர் (new folder\setup.exe) அல்லது File இன் மீது Right click செய்து வந்திருப்பின் (setup.exe)என்று டைப் செய்தால் போதும்.


அடுத்து Advanced tab இற்கு வாருங்கள்.Add shortcut என்பதை கிளிக் செய்யுங்கள்.


இதில் முதலாவதாக Desktop இல் shortcut icon உருவாக்குவது பற்றி பார்ப்போம்.source file name இற்கு "Run after extraction" என்பதற்கு வழங்கிய அதே இடத்தை இங்கும் கொடுத்துவிட்டு,shortcut description விரும்பினால் கொடுக்கவும்,shortcut name இற்கு Desktop இல் தெரிய வேண்டிய பெயரை கொடுத்தால் சரி. 



அடுத்து All Programs மெனுவில் தெரிய வைப்பதற்கு மீண்டும் Add shortcut என்பதை கிளிக் செய்யுங்கள்.அதில் where to create என்பதற்கு start Menu/programs என்பதை தெரிவு செய்து விட்டு,Desktop இல் shortcut icon உருவாக்க கொடுத்த அனைத்தையும் இங்கும் கொடுத்து விட்டு, Destination folder என்பதற்கு All Programs இற்குல் உருவாக்க நினைக்கும் Folder இன் பெயரை கொடுக்கவும்.



அவ்வளவுதான்.இந்த தொடரின் ஆரம்ப பதிவுகளை பார்த்தால் இதனை அழகாக வடிவமைக்கலாம்.

3 comments Blogger 3 Facebook

  1. தெரிந்ததுதான் என்றாலும் ....
    புதியவர்களுக்கு உபயோகப்படும் படி விரிவாக எழுதி உள்ளீர்கள் ... தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  2. பயன்னுள்ள தகவல்!.
    நன்றி,
    பிரியா
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  3. ஆஹா!!! சத்தியமா இன்னைக்குத்தான் பாக்குரேன் பாஸ்..
    நல்ல பிரயோசனமான பதிவுகள் எழுதி இருக்கிறீர்கள்.
    நன்றி

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top